மேலதிக வைத்திய நிபுணர்கள் இடமாற்றப்பட வேண்டும்: வடமாகாண சுகாதார அமைச்சர்

நாட்டில் சத்திர சிகிச்சைக் கூடமே இல்லாத வைத்திய சாலைகளில் சத்திர சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் போன்றோர் மேலதிகமாக கடமையில் உள்ளனர் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா. குணசீலன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கில் மன்னார், பருத்தித்துறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி உள்ளிட்ட வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்கள் இல்லை. சில வைத்தியசாலைகளில் ஓரிருவரே கடமையில் உள்ளனர்.

ஆனால் கிழக்கு மாகாணம் உட்பட ஏனைய மாகாணங்களில் உள்ள சில வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைக் கூடமே இல்லாத வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்கள் மயக்க மருந்து நிபுணர்கள் கடமையில் உள்ளனர்.

அவைகளை கவனத்தில் எடுத்து எமது மாகாணத்தில் உள்ள வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts