இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிஸிட்டர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவிலிருந்து பதவி விலகுவதாக தில்ருக்ஷி அனுப்பிவைத்த கடிதம், நேற்று ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, இன்று அவர் மீண்டும் மேலதிக சொலிஸிட்டர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக, கடந்த 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி நியமிக்கப்பட்ட தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, அதற்கு முன்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிஸிட்டர் நாயகமாக செயற்பட்டு வந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.