மேற்கு ஆபிரிக்க கடற்பகுதியில் துயரம்! குடியேற்றவாசிகள் 60 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!!

மேற்கு ஆபிரிக்காவின் கேப்வேர்ட்டின் கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் 60 குடியேற்றவாசிகள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.

சிறுவர்கள் உட்பட 38 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக சர்வதேச புலம்பெயர் அமைப்பு தெரிவித்துள்ளது.

செனெகல் சியாரோ லியோனை சேர்ந்த 100க்கும் அதிகமானவர்கள் குறிப்பிட்ட படகில் பயணித்துள்ளனர் – ஒரு மாதகாலமாக இந்த படகு கடலில் காணப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகின்றன.

படகுவிபத்து எப்போது இடம்பெற்றது என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

திங்கட்கிழமை படகு முதலில் தென்பட்டது படகு கவிழ்ந்துவிட்டதாக முதலில் கருதப்பட்டது ஆனால் அது மிதந்துகொண்டிருக்கின்றது என்பது பின்னர் தெரியவந்தது என ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

மரப்படகினை சால்தீவிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் ஸ்பெயினின் மீன்பிடி படகொன்று அவதானித்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜூலை பத்தாம் திகதி 101 பேருடன் இந்த படகு புறப்பட்டது என செனெகல் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Posts