மேடையில் நடனமாடியபோது மாரடைப்பால் நடிகை மரணம்!!!

புனேயில், மேடையில் நடனமாடியபோது மாரடைப்பு ஏற்பட்டு மராத்தி நடிகை உயிரிழந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

natanamatiyapotu-heart-attack-on-stagemarathi-actress_ashwini

‘அக்லேச்சே காந்தே’ என்ற மராத்தி படம் மூலம் அறிமுகமானவர் அஸ்வினி ஏக்போதே(வயது44). இவர் ‘தும்காதா’, ‘பாவரே பிரேம் ஹே’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ‘கணபதி பாபா மோரியா’, ‘தேபு’, ‘தன்யவார் தன்கா’ உள்ளிட்ட டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார்.

2009–ம் ஆண்டு வெளியான மராத்தி படம் ஒன்றில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்றுள்ளார். இவர் பரதநாட்டியத்திலும் வல்லவர் ஆவார்.

அஸ்வினி ஏக்போதே நேற்று முன்தினம் மாலை புனே பாரத் நாட்டிய மந்திர் அரங்கில் நடந்த ‘நாட்டியதிரிவிதா’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் இவர், சக கலைஞர்களுடன் மேடையில் நடனமாடி கொண்டு இருந்தார். அப்போது அஸ்வினி ஏக்போதே திடீரென நெஞ்சை பிடித்துக்கொண்டு மேடையில் சுருண்டு விழுந்தார்.

இதைப்பார்த்து மேடையில் இருந்த கலைஞர்கள் மற்றும் நிகழ்ச்சியை பார்த்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நடிகை அஸ்வினி ஏக்போதேயை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு நடிகையை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

நடிகை ஒருவர் நடன மேடையிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மராட்டியத்தில் திரையுலகத்தினரிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Posts