மெட்ராஸ் படத்தில் நாடக நடிகர்கள்

கார்த்தி, கேத்ரின் தெரசா நடிக்கும் படம் மெட்ராஸ். அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கி இருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்தப் படம் வடசென்னை மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டது.

அதாவது சென்னையின் பூர்வீக குடிமக்களை பற்றிய கதை. இதில் கார்த்திக்குடன் நடித்திருப்பவர்கள் அனைவருமே அசல் வடசென்னை இளைஞர்கள்.

madrass

குறிப்பாக இயக்குனர் ரஞ்சித், நாடகம் நடத்திய காலத்தில் நாடகத்தில் நடித்தவர்கள். அச்சு அசலான வடசென்னை முகமும், மேனரிசமும், பேச்சு வழக்கும் கொண்டவர்கள்.

என்றாலும் ஒரு மாதம்வரை அவர்களுக்கு ஒத்திகை நடத்திய பிறகே படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இவர்களில் கார்த்திக்கும், கேத்ரினாவும்தான் வடசென்னை ஆட்களாக மாற நிறைய ஒர்க்கவுட் செய்திருக்கிறார்கள்.

மெயின்கோபி, ஜானி, மணி ஆகியோர் முக்கியமான நடிகர்கள் இவர்களுடன் சென்னையில் போஸ்ட்டர் ஒட்டும் தொழிலில் பிரபலமான நந்தகுமாரையும் நடிக்க வைத்திருக்கிறார்கள். அவரும் வடசென்னையை சேர்ந்தவர்தான். படத்தில் நடித்திருக்கும் அத்தனை கேரக்டர்களும் நிஜமான வடசென்னை வாசிகள்.

Related Posts