‘மெட்ராஸ் கஃபே’வுக்கு ஜனாதிபதி மஹிந்த முதலிடவில்லை: ஆப்ரகாம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான ‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதியுதவி வழங்கவில்லை என்று அத்திரைப்படத்தின் கதாநாயகனான நடிகர் ஜோன் ஆப்ரகாம் தெரிவித்துள்ளார்.

madras-caffe

‘இத்திரைப்படத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரகசியமான முறையில் நிதி உதவி செய்துள்ளார் என்று வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை’ என்று நடிகர் ஆப்ரகாம் தெரிவித்துள்ளார்.

‘ ‘வியாகொம் 18 மோஷன் பிக்ஷர்ஸ்’ நிறுவனமே இத்திரைப்படத்தை தயாரிக்கின்றது. இந்த வதந்தியால் இந்நிறுவனம் கவலையடையும். இது தவிர, இரகசியமான முறையில் எவரும் என்னுடைய திரைப்படத்துக்கு முதலீடு செய்யவில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1990களில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு இரகசிய நடிவடிக்கை தொடர்பான உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது’ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


‘மெட்ராஸ் கஃபே’ பற்றிய சில தகவல்கள்

இலங்கையின் விடுதலைப் போராட்டத்தை கதைப்பிண்ணனியாக கொண்டு விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை மையப்படுத்தி சித்தரிக்கப்பட்டுள்ள பாலிவுட் திரைப்படம் இது.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த நிலையில், குறித்த யுத்த சூழலைத் தழுவி வெளிவரும் முதல் பாலிவுட் திரைப்படமும் இதுவே ஆகும்.

இத்திரைப்படத்திற்கு முன்னர் Jaffna (யாழ்ப்பாணம்) எனப் பெயரிட்டிருந்தார்கள். பின்னர் பல்வேறு சர்ச்சைகளினால் அப்பெயர் மாற்றப்பட்டு Madras Cafe ஆனது. ஜோன் ஆப்ரஹாம் மற்றும் ராக் ஸ்டார் திரைப்படத்தில் நடித்த அமெரிக்க மாடல் நார்கிஸ் ஃபக்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இதில் நடித்துள்ளனர்.

தீவிரவாதத்தை மையப்படுத்திய திரைப்படம் என விளம்பரப்படுத்தப்படுவதால், இலங்கையின் விடுதலைப் போராட்டம், விடுதலைப்புலிகள் பற்றிய எதிர்மறையான கண்ணோட்டம் படத்தில் தொணிக்கலாம் என இப்போதே விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தியாவில் விடுதலைப் போராட்டத்திற்க்கு எதிரான கருத்துகள் இருப்பதனால் இவ் படத்திற்க்கும் எதிர்மறையான விமர்சனங்கள் படம் வெளிவரமுதலே எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய புலனாய்வு ஏஜெண்டாக ஜோன் ஆப்ரஹாமும், சர்வதேச ரிப்போர்ட்டராக நார்கிஸ் ஃபக்ரியும் இத்திரைபப்டத்தில் நடித்துள்ளனர். லீனா மரியா விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளில் ஒருவராக நடித்துள்ளார். இத்திரைப்படம் இந்தியா, இலங்கை இரு நாடுகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. இதன் ட்ரெய்லர் (ஜூலை 12) வெளியான பாக் மில்கா பாக் ஹிந்தி திரைப்படத்துடன் தியேட்டரில் வெளியிடப்பட்டது.

மெட்ராஸ் கஃபே திரைப்படத்தினை சீஜித் சிர்கார் இயக்கியுள்ளார். இவருடைய முன்னைய திரைப்படங்களான யஹான், விக்கி டானர் ஆகியன மாறுபட்ட யதார்த்தமான திரைக்கதைகளுக்காக வெற்றி பெற்ற திரைபடங்களாகும்.

Related Posts