கொழும்பு – காலி வீதியில் கல்கிஸை மிஹிந்து மாவத்தையில் இலக்கம் 172/2 இல் அமைத்துள்ள இரு மாடிகள் கொண்ட வீட்டில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்று செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியுள்ளனர்.
வீட்டின் முன்புறத்தில் ‘மெடம் ஷிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ’ எனப் பெயர்பலகை இடப்பட்டுள்ளது. இந்த வீட்டின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும், மறுபகுதி கட்டி முடிக்கப்படாத நிலையிலும் காணப்படுகின்றது.
நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்படி வீட்டின் அனைத்துப் பகுதிகளையும் சோதனையிட்டு தகவல்களைப் பதிவுசெய்துள்ளனர்.
‘மெடம் ஷிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ’ வீட்டில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் சோதனை நடத்தியமை குறித்து மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் அதிர்ச்சியில் உள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.