மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிகிச்சை

செரிபரல் பால்சி லங்கா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரணையில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிகிச்சை, சக்கரகதிரை வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் மே மாதம் சனிக்கிழமை (02) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் நடைபெறவுள்ளது.

யாழ். கச்சேரிக்கு அண்மையிலுள்ள சுண்டுக்குளியிலுள்ள ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தியே இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

கடந்த மாதம் 08ஆம் திகதி நடைபெற்ற இந்த மருத்துவ சேவையில் கலந்து கொள்ள தவறியோர், இதில் கலந்து கொண்டு ஆலோசனை பெறமுடியும். முதலாவது சிகிச்சை முகாமில் பங்குபற்றியோரும் தேவையேற்படின் கலந்து கொள்ளலாம். வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ள யாவரும் இதில் பங்குபற்றலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts