மூளாய் விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் சாவு

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியைவிட்டு விலகி பனை மரத்துடன் மோதி விபத்துக் குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவம் மூளாய் மேற்கு சுழிபுரத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இதில் அதே இடத்தைச் சேர்ந்த தம்பிராசா வைகுந்தகுமார் (வயது30) என்ற இளைஞர் உயிரிழந்தார்.வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள் பனை மரத்துடன் மோதியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த இவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நேற்றிரவு யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக உறவினரைப் பார்க்க வந்த போதே இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts