மூன்று ஆண்டுகள் சிறை!!! அரச ஊழியர்களிற்கு எச்சரிக்கை!

தபால்மூலம் வாக்களிக்கும் அரச உத்தியோகத்தர்கள், வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தால் குறைந்தது 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரச உத்தியோகத்தர்கள் சிலர் தமது வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தே தேர்தல்கள் ஆணைக்குழு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Related Posts