யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி அதிபரின் இடமாற்றத்தை கண்டித்து மூன்றாவது நாளாக மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகின்றது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் மாணவர்களின் போராட்டத்தை கவனத்தில் கொள்ளவில்லை.
எதிர்வரும் நாட்களில் தமக்கான நீதி கிடைக்கா விட்டால் வீதி மறியல் போராட்டம் செய்யப் போவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா மாணவர்களின் போராட்டம் தொடர்பில் அசமந்தப் போக்கை கையாள்வது மாணவர்களுக்கு பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது