மூன்றாம் நாளாக தொடர்கிறது போராட்டம்

தம்மை மீளக்குடியமர்த்தக் கோரி வலி.வடக்கு மக்கள் ஆரம்பித்துள்ள தொடர் உணவு விடுப்பு போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

maviddapuram-arppaddam

1990ஆம் ஆண்டில் இருந்து உயர்பாதுகாப்பு வலையம் என இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது நிலங்களை விடுவிக்க கோரி மக்கள் மாவிட்டபுரம் கந்தன் ஆலய முன்றலில் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

இன்றைய மூன்றாம் நாள் போராட்டத்திலும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தாண்டி நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

maviddapuram-arppaddam-2

இன்றைய நாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் , வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கஜதீபன் , சித்தார்த்தன் , ஆகியோரும் , பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Related Posts