இவ்வருடத்துக்கான மூன்றாம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் டிசெம்பர் 04 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டுக்கான முதல் தவணைக்காக அனைத்து பாடசாலைகளும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி திறக்கப்படுமெனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் (16) வட மாகாண பாடசாலைகளில் மூடப்பட்டமைக்குப் பதிலாக எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறும் என வடமாகாண கல்விச் செயலாளர் ஆர். ரவீந்தரன் தெரிவித்தார்.
மோசமான காலநிலை காரணமாக வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலைகளை மூட அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அதற்கமைய நேற்று முன்தினம் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன.
வடமாகாண கல்விச் செயலாளர் ரவீந்த்ரன் கருத்து தெரிவிக்கையில் வடமாகாணத்தின் பெரும்பாலான பிரதேசங்கள் நீரினால் மூழ்கிப் போயிருந்தமையினால் வீதிகள் மூடப்பட்ட போக்குவரத்து தடை ஏற்பட்டதுடன் மோசமான காலநிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் பாடசாலைகள் மூட தீர்மானிக்கபட்டது என்று தெரிவித்தார்.