மூதாதையர் விட்டுச் சென்ற கலைகளை எதிர்கால சந்ததியினரும் தொடர வேண்டும் என வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார்.
வடமாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை,இளைஞர் விவகார அமைச்சு நடாத்தும் அழகியற் கல்வியில் நமதடையாளம் எனும் தொனிப்பொருளில் கருத்தமர்வு ஒன்று இடம்பெற்றது.
இன்று காலை 9மணியளவில் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா கலந்து கொண்டு உரையாற்றுகையில்,
நமது தமிழர்கள் கலைகளில் சிறந்து விளங்க வேண்டும்.கலை என்பது பரம்பரை பரம்பரையாக தமிழர்களிடையே வளர்ந்து வரும் சிறப்பம்சம்.தற்போது அந்த கலைகள் குறித்து பல பேருக்கு தெரிவதில்லை உதாரணமாக தற்போதுள்ள சமூகத்தில் கோலம் போடும் பழக்கம் யாருக்கு தெரியும் இல்லை.முன்னைய காலங்களில் கோலம் போடுகின்றமை முக்கிய சிறப்பியல்பு ஆனால் தற்பொழுது பாடசாலைகளிலும் சரி வீடுகளிலும் சரி இந்த நடைமுறை இல்லை அவர்கள் இது தொடர்பில் பயிற்றுவிப்பதும் இல்லை.
இவ்வாறாக எம்மைச் சூழவுள்ள சமூகம் தமிழர்களின் கலையை வளர்க்க பாடுபடவேண்டும் என்பதே எனது கருத்து.
நமதடையாளம் அழிவடையக் கூடாது இதனை வளர்ப்பதற்கு நம்மாலான பங்களிப்பை செய்வதுடன் இந்த கலைக்குரிய வடிவமாக ஓர் ஆவணத்தை தயார் செய்து அதன்படி செயற்படுவோம். எனவும் அவர் தெரிவித்தார்.