‘முஸ்லீம் தலைமைகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் – அயூப் அஸ்வின்

முஸ்லிம் தலைமைகளின் மீது முஸ்லிம் மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதை ஊவா மாகாண சபை தேர்தலில் தெளிவாக வெளிக்காட்டியுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்வின் தெரிவித்தார்.

ayub-asmin

வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர், கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (25) இடம்பெற்று வருகின்றது.

இந்த அமர்வில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் குரல்கொடுக்கின்ற போதும், முஸ்லிம்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதில்லை என உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளிக்கையிலேயே அஸ்மின் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறியதாவது,

‘முஸ்லீம் தலைமைகள் மீது எனக்கும் நம்பிக்கை இழந்துள்ளதுடன், முஸ்லிம் மக்களும் நம்பிக்கை இழந்துள்ளனர்.

ஊவா மாகாண சபை தேர்தலில் பெரும்பான்மையினருடன் நல்லிணக்கத்துடன் இணைந்து செயற்படுவோம் எனக்கூறி போட்டியிட்ட இரண்டு முஸ்லிம் கட்சிகள் தோல்வியடைந்துள்ளன. முஸ்லிம் தலைவர்கள் சுயலாபத்துக்காக செயற்பட்டு வருகின்றனர்.

வடக்கில் தமிழ் – முஸ்லிம் சமூகத்தினர் இடையிலான உறவுகள் வலுப்பெற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts