வடக்கிலிருந்து வெளியேறியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான காரசாரமான விவாதகங்கள், வட மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்றன.
வடமாகாண சபையில் நேற்று முன்தினம் நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதங்களின் தொடர்ச்சி நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
இதன்போது வட மாகாண சபையின் ஆளுக்கட்சி உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் உரையாற்றுகையில், ‘1977ஆம் ஆண்டிலிருந்து முஸ்லிம் மக்களின் தலைவர்கள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துள்ளனர்.
ஆகவே தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் இணைப்பொன்று இருந்து வந்துள்ளது. இதனை எந்தவொரு தடையுமின்றி தொடர்ந்து பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’ என்றார்.
இதனைத் தொடர்ந்து வட மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் அபாஸ் அப்துல் ரிஸ்வான், ‘வடக்கில் முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்வு எப்போது என கேள்வி எழுப்பியதுடன் தமக்கு ஏற்பட்ட அநீதிகளையும் முன்வைத்தார். இருப்பினும் அவரது அக்குற்றச்சாட்டுக்களை பாலச்சந்திரன் கஜதீபன் மறுத்தார்.