அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தின் பிரகாரம் மற்றுமொரு தடவை தேர்தலில் போட்டியிடுவதற்கு இடையூறு இருக்கின்றதா என்பது தொடர்பில், உயர்நீதிமன்றம் தனது அபிப்பிராயத்தை ஜனாதிபதி செயலகத்துக்கு நேற்று திங்கட்கிழமை இரவு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விவகாரத்தை முழு நீதியரசர் குழுமம் ஆராயும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் 10 நீதியசர்கள் மட்டுமே ஆராய்ந்து அபிப்பிராயத்தை அனுப்பிவைத்துள்ளனர்.
உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளிநாட்டுக்கு சென்றிருப்பதால் நீதியரசரான சலீம் மஸ்ருப் இந்த குழுமத்தில் பங்கேற்கவில்லை என்று உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர் கே. ஸ்ரீபவன், நீதியரசர் சந்திரா ஏக்கநாயக்க, நீதியரசர் பிரியசத் டீப், நீதியரசர் ஈவா வனசுந்தர, நீதியரசர் ரோஹிணி மாரசிங்ஹ, நீதியரசர் புவனகே அலுவிஹார, நீதியரசர் சிசிர ஜே.டி.அப்ரூவ், நீதியரசர் சரத் டி. அப்ரூவ் மற்றும் நீதியரசர் பிரியந்த ஜயவர்தன ஆகிய பத்து பேரைக்கொண்ட நீதியரசர்கள் குலுமமே ஜனாதிபதியின் கோரிக்கையை ஆராய்ந்து அனுப்பிவைத்துள்ளது.
அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தின் பிரகாரம் மற்றுமொரு தடவை தேர்தலில் போட்டியிடுவதற்கு இடையூறு இருக்கின்றதா என்பது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை நேன்று திங்கட்கிழமை 10ஆம் திகதி மாலை 3 மணிக்கு முன்னர் அறிவிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த 5ஆம் திகதி உயர்நீதிமன்றத்திடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.