முழத்துக்கு முழம் செக் பொயின்ற் எப்படி புலிகள் வருவார்கள் – தாயார்

missing_people_enquiry_005யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டில் இருந்து எல்லா இடமும் ஆமியும் செக் பொயின்ரும் இருக்கும் போது புலிகளுடன் உங்கள் மகன் தொடர்புபட்டவரா என்ற கேள்வியை நீங்கள் எப்படி என்னிடம் கேட்பீர்கள் என தாயார் ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழுவினரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த சம்வம் ஒன்று இடம்பெற்றது.

நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான பதிவுகள் மாவட்டச் செயலகத்தில் நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போதே தாயொருவர் ஆணைக்குழுவினர் கேட்ட குறித்த கேள்விக்கு மேற்கண்டவாறு சீற்றத்துடன் பதிலளித்தார்.

அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில், எனது மகன் 20007.03.30 வீட்டில் இருந்து ரியூசனுக்கு போகும் போது சுண்டுக்குழி சந்தியில் நின்ற இராணுவத்தினர் மகனை மறித்து கதைத்ததை நான் கண்டேன்.

அப்போது நான் மகனிடம் கேட்டேன் ரியூசனுக்கு போக நேரம் போகவில்லையா என்று அவரும் 30 நிமிடம் இருப்பதாகவும் தெரிவித்துவிட்டு தொடர்ந்தும் கதைத்துக் கொண்டு நின்றதை நான் பார்த்தேன்.

பின்னர் என் மகன் வீதியால் சைக்கிளை உருட்டிக் கொண்டு வரும் போது பின்னால் 2 இராணுவமும் வருவதைக் கண்டேன்.

அதன்பின்னர் நான் வீட்டுக்குப் போய்விட்டேன். ஆனால் மாலை வேளை ஆகியும் மகன் வீட்டிற்கு வரவில்லை. உடனே குறித்த சந்திக்கு போனேன் அங்க யாரும் இல்லை. பின்னர் சுண்டுக்குழி பெரிய முகாமுக்கு போய் என்மகன் பற்றி விசாரித்தேன் கத்தி அழுதேன் ஆனால் அவர்கள் இல்லை என்று கூறிவிட்டனர்.

நான் எல்லா இடமும் போய் முறைப்பாடு கொடுத்துவிட்டேன். இதுவரை எதுவிதமான தகவலும் இல்லை என்றார்.

அதன்போது உங்கள் மகன் விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டவரா அல்லது போராளியாக இருந்தவரா என ஆணைக்குழுவால் கேள்வி எழுப்பப்பட்டது.

யாழ்ப்பாணத்திற்கு 1996 ஆம் ஆண்டு இராணுவம் வந்ததும் முழத்துக்கு முழம் இராணுவ முகாமும் சோதனைச் சாவடிகளும் இருந்தது. இவ்வாறு இருக்க எவ்வாறு விடுதலைப்புலிகளுடன் என் மகன் தொடர்புகளை வைத்திருக்க முடியும். இவ்வாறு நீங்கள் கேட்க கூடாது என்று ஆணைக்குழுவினருக்கு பதிலடி கொடுத்தார். பிடிக்கப்பட்ட போது என் மகனுக்கு 20 வயது அவர் படித்துக் கொண்டிருந்தவர் அவரை எப்படி புலி என்று பிடிக்க முடியும் என்றும் அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மகனை கேட்ட கணவனை அடித்துகொன்றது இராணுவம் – மனைவி

யாழில் சாட்சியம் நிறைவு, 795பேர் சாட்சியமளிக்க பதிவு

மகனுக்கு இராணுவ வேடமிட்டு தேடுதல் நடத்தப்பட்டது – தந்தை சாட்சியம்

இராணுவமும் கருணா குழுவும் மருமகனை இழுத்துச் சென்றனர்

கணவருடன் விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களும் சரணடைந்தனர் – யோகியின் மனைவி

சாவகச்சேரியில் 59பேரில் 44 பேர் சாட்சியம், இராணுவத்திற்க்கு எதிராக அதிக சாட்சிகள்

கருணா குழு எனக்கூறியே மகனை கடத்தினர், தாய் சாட்சியம்

கண்ணீரால் கரைந்த கோப்பாய் பிரதேச செயலகம்

கணவரை இராணுவத்தினரிடமே ஒப்படைந்தேன் அவரை மீட்டுத் தாருங்கள்,ஆணைக்குழுவின் முன்னால் ஒலித்த குரல்

Related Posts