முழங்காவில் துயிலுமில்லத் துப்பரவுப் பணியில் ஈடுபட்ட மக்கள்

கிளிநொச்சி முழங்காவிலில் துயிலுமில்லத் துப்பரவுப் பணிகள் நேற்றுமாலை நடைபெற்றுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ள அவர்களும் கலந்துகொண்ட இந்தத் துப்பரவுப் பணியில் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களைத் துப்பரவும் செய்யும் பணிகள் நேற்று காலை கனகபுரம் துயிலுமில்லத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை முழங்காவில் துயிலுமில்லத்தில் துப்பரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

Related Posts