முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி மோட்டார் சைக்கிள் பேரணி – பல்கலை. மாணவர்கள் அழைப்பு

மே -18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை உந்துருளி (மோட்டார் சைக்கிள்) பேரணியை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நடத்துகின்றனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் மோட்டார் சைக்கிள் பேரணி ஏ9 கண்டி வீதியூடாக பரந்தன் சந்தியை அடைந்து அங்கிருந்து முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.

வலி சுமந்த முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி மாபெரும் உந்துருளிப் பேரணியி்ல் தமிழராய் அணி திரள்வோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது.

Related Posts