முள்ளிவாய்க்கால் பேரவல நாள் இன்று! இழந்த உறவுகளுக்கு தரணி எங்கும் நினைவுகூரல்!!

முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலம் நடந்த 7 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை வடக்கு – கிழக்கான தமிழர் தாயகத்திலும், தரணி எங்கும் நினைவு கூரப்படுகின்றது.

பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறவுள்ளன. இவற்றுக்கான ஒழுங்குகளை வடக்கு மாகாண சபை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பல அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் பல ஏற்பாடு செய்துள்ளன.

வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் மக்களை அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாலை 6.05 மணிக்கு அனைத்து மக்களையும் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துமாறு ‘மே 18’ இயக்கம் கேட்டுள்ளது.

மேலும், ஆஸ்திரேலியா, பிரிட்டன், சுவிஸ், தமிழ்நாடு, ஐரோப்பியா அமெரிக்கா, கனடா என தமிழர் வாழும் தேசம் எங்கும் இன்றைய தினம் உறவுகளை நினைவு கூர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Related Posts