முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பம்!

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் ‘முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்’ இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

may-18

இந்த நிகழ்வில், வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாண உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், கஜதீபன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் ஈகை சுடரேற்றப்பட்டு மலரஞ்சலியுடன், அகவணக்கம் செலுத்தி இந்த நினைவு வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எதிர்வரும் 18ம் திகதி வரையில் இந்த நினைவு வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ளதாகவும், நெடுந்தீவு, நாவுறுகோவில், தென்மராட்சி, முள்ளிவாய்கால் உள்ளிட்ட பல பகுதிகளிலும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட உள்ளதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

இதன்போது, அப்பகுதியில் இராணுவப் புலனாய்வாளர்கள் சூழ்ந்திருந்த போதிலும், சுடரேற்றி நினைவு வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts