முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பயங்கரவாத அமைப்பை நினைவுகூராமலும், கொரோனா விதிமுறைகளை மீறாமலும் நினைவேந்தலை நடத்தலாமென முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பொலிசார் தாக்கல் செய்த தடை மனுவை இரத்து செய்யக் கோரி, இன்று தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தின் மீதான விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.