முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குச் சென்ற விக்கி சங்குப்பிட்டியில் ஒரு மணிநேர தடுத்து வைத்தலின் பின் திருப்பி அனுப்பப்பட்டார்

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு திருப்பி அனுப்ப்பபட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11 ஆவது நினைவுநாளான இன்று கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து முள்ளிவாய்க்காலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இவ்வாறு தடுத்து ழைவக்கப்பட்டுள்ளதோடு மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

விக்கினேஸ்வரன் உட்பட தமிழ் மக்கள் கூட்டணியின் சுமார் பத்துப் பேர் வெவ்வேறு வாகனங்களில் அங்கு சென்றுகொண்டிருந்தபோது இன்று காலை 6.30 மணியளவில் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் வைத்து பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகக் காக்க வைக்கப்பட்ட பின்னர், அவர்களை மீண்டும் யாழ் நோக்கி திருப்பினுப்பியுள்ளனர்.

Related Posts