முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்! செம்மணியில் சுடர் ஏற்றி அஞ்சலி!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நினைவுச் சுடரேற்றுவதற்கு யாழ்ப்பாணம் பொலிஸார் அனுமதி வழங்க மறுத்தனர். எனினும் சுமார் 30 நிமிடங்களின் பின் நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்று முற்பகல் 11 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இந்த நினைவுச் சுடரை ஏற்றுவதற்காக வந்த நிலையிலேயே பொலிஸார் இவ்வாறு அனுமதி மறுத்தனர்.

அங்கு வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பொலிஸாருடன் பேச்சு நடத்தினர்.

எனினும் சுமார் 30 நிமிடங்களாக பொலிஸாரால் அனுமதியளிக்கப்படவில்லை.

அங்கு இராணுவத்தினரும் வருகை தந்துள்ளதுடன், நினைவஞ்சலி செலுத்த முடியாது எனவும் திரும்பிச் செல்லுமாறும் பொலிஸார் பணித்தனர்.

பின்னர் சமூக இடைவெளியைப் பின்பற்றி நினைவுச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Posts