முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: வட.மாகாணமெங்கும் சோகமயம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்காக கிளிநொச்சியில் அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் முடங்கியுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்காக அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டு துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி சேவைச்சந்தை உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதுடன், அரச அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் வழமைபோல் செயற்படுகின்றன.

அத்துடன், கிளிநொச்சி நகரெங்கும் கறுப்புக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன், பிரதேசமெங்கும் சோக மயமாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன் நகரமெங்கும் கறுப்புக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு நினைவுதினம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் மீனவர்கள் எவரும் கடலுக்குச் செல்லவில்லை என்பதுடன், வர்த்தகர்கள் அனைவரும் தமது வியாபார நிலையஙகளைப் பூட்டி இன்றைய நினைவுதினத்திற்கு ஆதரவளிக்குமாறு வர்த்தக சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Posts