முள்ளிவாய்க்கால் நினைவுதின துண்டுப்பிரசுரம் வைத்திருந்தவர் கைது

arrestமுள்ளிவாய்க்கால் நினைவுதின துண்டுப்பிரசுரம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுன்னாகம் வீதி, நிலாவரைப் பகுதியினைச் சேர்ந்த நபர் ஒருவர் இராணுவத்தினரால் நேற்று வியாழக்கிழமை (15) நள்ளிரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தனக்கும் மேற்படி துண்டுப்பிரசுரத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையெனவும் யாரோ வீட்டிற்கு வந்து எறிந்துவிட்டுச் சென்றதினையே தான் எடுத்து வைத்திருந்ததாக குறித்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கைதான சந்தேகநபர், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts