முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை புறக்கணிப்போம்: யாழ். மாணவர் ஒன்றியம்

வட. மாகாண சபை தமது கோரிக்கையை ஏற்காத பட்சத்தில், முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வை புறக்கணிப்போம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கிருஷ்ணமீனன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”நீதி மறுக்கப்பட்ட சமூகமாக வடக்கு- கிழக்கு தாயக மக்கள் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை யுத்தம் முற்றுபெற்ற முள்ளிவாய்க்காலில், ஒற்றுமையாக நாம் ஒன்றிணைந்து சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த வேண்டும்.

இதனை உலகுக்கு வெளிக்காட்டுவதற்கு, வடக்கு- கிழக்கு மாணவ சமூகமும், சிவில் அமைப்புக்களுமே நடுநிலையாளர்களாக செயற்பட முடியும்.

தனிப்பட்ட அரசியல் நிறுவனமோ அல்லது வடமாகாண மற்றும் கிழக்கு மாகாண சபை போன்ற அரசியல் சார்ந்த அமைப்புகளோ இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்துவது சிக்கல்களையே தோற்றுவிக்கும்” என்றும் குறிப்பிட்டார்.

Related Posts