முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் படத்தை முகப்புப்புத்தகத்தில் பதிவேற்றிய மாணவன்மீது தாக்குதல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் புகைப்படத்தை தனது முகப்புப் புத்தகத்தில் பதிவேற்றிய வந்தாறு மூலையைச் சேர்ந்த முகாமைத்துவ பீடம் 2ஆம் வருட மாணவன் மீது சிங்கள மாணவர்கள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

லட்சியமூர்த்தி சுமேஸ்காந் என்ற 23 வயதுடைய மாணவன் மீது சிங்கள மாணவர்கள் சிலர் செவ்வாய்க்கிழமை மாலை தாக்குதலை நடாத்தியுள்ளனர்.

தாக்குதலுக்குட்பட்ட குறித்த மாணவன் செங்கலடி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார்.

குறித்த மாணவன் முள்ளிவாய்க்கால் நினைவுதின புகைப்படத்தை தனது முகப்புப் புத்தகத்தில் பதிவேற்றியிருந்ததை அவதானித்த சிங்கள மாணவர்கள் அப்புகைப்படத்தை அகற்றுமாறு கோரியிருந்தனர்.

எனினும், குறித்த மாணவன் அப்புகைப்படத்தை நீக்காத காரணத்தினால் தன்மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குறித்த மாணவன் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts