முள்ளிவாய்க்கால் நிகழ்வில் நடந்தது என்ன? – மௌனம் கலைத்தார் துளசி

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் அளப்பரிய பங்காற்றிய யாழ். பல்கலைக் கழகத்திற்கு, ஒரு சிலரின் தனிப்பட்ட செயற்பாடுகளினால் கரும்புள்ளி ஏற்படுத்தப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்படாத நிலையில் அங்கு தொடர்ந்தும் நிற்க விரும்பாமலேயே தான் வெளியேறியதாகவும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகச் செயலாளர் துளசி தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் தின நிகழ்வுகளின்போது, முன்னாள் போராளியான துளசி யாழ். பல்கலைக் கழக மாணவர்களினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட செய்தி வெளியாகியதை தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும் வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்றுவருகின்ற நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே துளசி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், முள்ளிவாய்க்கால் தினம் சிறப்பான முறையில் இடம்பெற வேண்டும் என்ற அடிப்படையிலேயே தங்களுடைய அனைத்து செயற்பாடுகளும் அமைந்திருந்ததாகவும், அந்தவகையில் தங்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறியிருக்கின்றமை மகிழ்ச்சியிளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அவர்களின் தலைமைக்கும் அவப்பெயர் ஏற்படாத வகையிலும் கௌரவத்தை ஏற்படுத்தும் வகையிலுமேயே முன்னாள் போராளிகள் ஒவ்வொருவரும் நடந்து கொள்வார்கள் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

Related Posts