முள்ளிவாய்க்காலில் மாணவி ஒருவரின் இதய அஞ்சலி!

முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் இறந்த தனது உறவினர்களுக்காகவும், முள்ளியவளையில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காகவும் மாணவி ஒருவர் பள்ளிச் சீருடையில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இறுதிக்கட்டப் போரின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இனவிடுதலைப்போராட்டத்தில் மாணவர்களின் பங்களிப்பு அளப்பரியது.

அந்தவகையில் தனது மக்களின் விடுதலைக்காக முதன்முதலாக உயிர் நீத்த முதல் மாணவ வீரன் பொன் சிவகுமார் ஆகும்.

இலங்கை மற்றும் இந்திய இராணுவம் தமிழின அழிப்பின்போது வகை தொகையின்றி மாணவர்களைக் கொன்று குவித்தனர்.

இவற்றில் செஞ்சோலை, நாகர்கோவில் பாடசாலையில் இடம்பெற்ற குண்டுவீச்சு… இவ்வாறு பாடசாலைகள் என்று தெரிந்துமே திட்டமிட்டவகையில் குண்டுவீசி படுகொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாடசாலை மாணவி ஒருவர் யுத்தத்தால் கொல்லப்பட்ட மக்களுக்கு முள்ளிவாய்க்காலுக்குச் சென்று அஞ்சலி செய்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts