இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தூபி அமைப்பது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனினால் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.
இதன்போது ‘வன்னிப் பகுதியில் நடைபெற்ற யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இவ்வாறு கொல்லப்பட்டவர்களுக்கு இன்றுவரை அவர்களை நினைவுகொள்வதற்கு நினைவுத்தூபி ஒன்று இல்லாத காரணத்தினால் இந்த மக்களை நினைவுகூறும் வகையில் ஒரு நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும்’ என்று வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சபையில் பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.
இதனை மாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் வழிமொழிந்ததைத் தொடர்ந்து, இந்த பிரேரணை சபையில் எதிர்ப்புக்கள் இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
வட மாகாணசபை அமர்வில் கமலேந்திரன் பொலிஸ் பாதுகாப்புடன் கலந்து கொண்டுள்ளார்
வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை!
முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம் அமைக்க வடக்கு மாகாண சபையில் பிரேரணை?