முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பேரவலத்தின் நினைவாக புத்தக வெளியீடு

முள்ளிவாய்க்கால் நினைவாக, “முள்ளிவாய்க்கால் பதிவுகள்” எனும் நூல் யாழில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில், கொள்கை ஆய்வுக்கான நிலையமான “அடையாளம்” அமைப்பினது ஏற்பாட்டிலேயே நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இவ்வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட மக்கள் மாத்திரமே கலந்துகொண்டனர் என்பதும் அரசியல் பிரமுகர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts