முல்லையில் 2500 பேருக்கு அடையாள அட்டை இல்லை – கபே

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர் அட்டை உள்ளவர்களில் 2500 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டையில்லை என கபே அமைப்பு சுட்டுக்காட்டியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுகுடியிருப்பு, கரைத்துறைபற்று இரு பிரதேசங்களிலும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது.

எனினும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களில் 2500 பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு முன்னர் நடமாடும் சேவை மூலம் குறித்த 2500 பேருக்கும் தேசிய அடையாள அட்டை பெற்றுதருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் தேர்தலுக்கு முன்னர் குறித்த பிரதேசத்தில் வாக்களிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றினை மேற்கொள்ள வேண்டும் எனவும் கபே அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts