தற்போது பெய்துவரும் கன மழை காரணமாக முல்லைத்தீவு – கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவின் கீழ், ஆண்டான்குளத்தை அடுத்துள்ள நித்தகைக்குளம் உடைப்பெடுத்தில் காணாமற்போன 6 பேர் விமானப் படையினரால் இன்று காலை பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விமானப்படையின் எம்17 உலங்கு வானூர்தியின் உதவியுடன் அவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டனர் என்று விமானப் படையினர் தெரிவித்தனர்.
நித்தகைக்குளம் மற்றும் அதனோடு இணைந்த வயல் நிலங்கள் கடந்த கால அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேல் பயன்பாடின்றி காணப்பட்டுவந்துள்ளது.
நித்தகைக் குளம் கடந்த சில மாதங்களுக்கு முனபதாகவே மறுசீரமைப்புச் செய்யப்பட்டிருந்த்து.
அத்துடன் மீள் குடியமர்த்தப்பட்ட பிற்பாடு இந்த குளம் மற்றும் அதனோடு சேர்ந்த பகுதிகளை வன இலாகா திணைக்களத்தினர் ஆக்கிரமித்து வைத்திருந்துள்ளனர். இந் நிலையில் அந்த பகுதி விவசாய மக்கள் குறித்த குளத்தினையும், 2100 க்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களையும் விடுவித்துத் தரும்படி அப்பகுதி மக்கள் பிரதிநிதிகளிடம் கோரியிருந்தனர்.