முல்லைத்தீவு மாவட்டத்தை சோ்ந்த ஒருவா் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருக் கலாம் என்ற சந்தேகத்தின் பெயாில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக சு காதார அமைச்சு அதிகாாி ஒருவா் கூறியிருக்கின்றாா்.
இன்று காலை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்ட சுகாதார அதிகாரியொருவரே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,
நேற்று முன்தினம், முல்லைத்தீவில் இருந்து ஒருவரும் கண்டியில் இருந்து ஒருவரும் வாத்துவ பகுதியிலிருந்து ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் தொற்று இருக்குமென்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை சீனாவில் இருந்து வருகைத்தரும் அனைத்து இலங்கை மாணவர்களையும் தியத்தலாவில் இரண்டு வாரம் தடுத்து வைத்து அவதானிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.