முல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை – பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது!

முல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் விஜிதரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடொன்றிலிருந்து கடந்த வாரம் முல்லைத்தீவு வந்த குடும்பஸ்தரின் விமான பயணத்தின் போது சீனாவினை சேர்ந்தவர்களும் இவரோடு பயணம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் அவர் தனது சொந்த ஊரான முல்லைத்தீவிற்கு வந்தபோது காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனியார் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கொரோனா தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகளுடன் இவர் காணப்பட்ட காரணத்தால் மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக இவர் களனியில் அமைந்துள்ள தொற்று நோய் வைத்தியசாலையில் பரிசோதனைக்கு அனுப்பிய வைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மருத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி விஜிதரன் தெரிவித்துள்ளார்.

Related Posts