முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
அதன்படி அவர் நேற்று (புதன்கிழமை) இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்துள்ளார்.
வைத்தியசாலையில் நிலவும் சில குறைபாடுகள் தொடர்பாக மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகள் குறித்து ஆராயும் பொருட்டே ஆளுநரின் இந்த திடீர் கண்காணிப்பு விஜயம் அமைந்திருந்தது.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அத்தோடு முல்லைத்தீவு மாட்டத்தின் வைத்தியர்கள் பணிக்கு ஒழுங்காக சமூகமளிப்பதில்லையென்றும் கடமைகளை சரியாக செய்வதில்லையென்றும் மக்கள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருவதாக சிவில் சமூக அமைப்பினர் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறான நிலையிலேயே வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.