முல்லைத்தீவு வாடிகள் எரிப்பு சம்பவம் : வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மூவர் கைது

முல்லைத்தீவு – நாயாற்றுப் பகுதியில் கடற்றொழிலாளர்களின்  வாடிகள்  எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டதாக  முல்லைத்தீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மூவரே  கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு கடற்பரப்பில் அனுமதியின்றி கடற்றொழிலில் ஈடுபட்ட 27 வெளி மாவட்ட மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது 8 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Posts