முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது

mullai_fishermen_protestகடந்த மூன்று நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்று பிற்பகலுடன் கைவிடப்பட்டுள்ளது.

இந்த மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன வாக்குறுதி வழங்கியதையடுத்து, மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

அனுமதியின்றி முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுகின்ற வெளி மாவட்ட மீனவர்களை வெளியேற்றுதல், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளைத் தடைசெய்தல், உள்ளூர் கரைவலை மீனவர்களுக்கு தொழிலுக்கான நிரந்தர அனுமதிப்பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Related Posts