நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைதந்த இனத்துவக் கற்களுக்கான சர்வதேச நிலையத்தினைச் சேர்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேர் கேப்பாபிலவில் நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களைச் சந்தித்து அவர்களின் நிலவரங்களை கேட்டறிந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் நடக்கும் இடத்திற்கு சென்ற மாணவர்கள் அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்கள்.