முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் பலத்த மழை; வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிப்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

புதுக்குடியிருப்பில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள், போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட முடியாமல் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

புதுக்குடியிருப்பின் பல இடங்களில் வெள்ள நிலை காணப்படுவதனாலும், வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தமையினாலும் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள், வர்த்தகர்கள் முதலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக இடியுடன் கூடிய பலத்த மழை காரணமாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் வெள்ள அபாய சிவப்பு எச்சரிக்கையினை விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts