முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு – மந்துவில் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல்!!

1999 ஆம் ஆண்டு முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மந்துவில் சந்திக்கு அருகாமையில் விமானப்படை மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலை நடத்தி இன்றோடு 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள.

இந்த குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுடைய 24 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் 24 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களை நினைவுகூரும் குறித்த நிகழ்வுகள் இன்று தாய்த் தமிழ் பேரவையின் ஏற்பாட்டில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சி.குகனேசன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts