முல்லைத்தீவு பரந்தன் வீதியில் வட்டுவாகல் பாலத்துக்கு இருகில் பாரிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளது.
32 ஏக்கர் நிலப்பரப்பில் 780மில்லியன் ரூபா செலவில் இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான அளவீடு பணிகள் நேற்று காலை ஆரம்பமாகின.
இந்த தேசிய விளையாட்டு மைதானம் முல்லைத்தீவுக்கு தேவை என்பதனை மறைந்த வடக்கு மாகாணசபை பிரதி அவைத்தலைவர் அமரர் அன்ரனி ஜெயநாதன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.