முல்லைத்தீவில் 12 சோடிகளுக்கு சட்ட ரீதியான திருமணப்பதிவு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் சமய முறைப்படி திருமணத்தில் இணைந்துகொண்டவர்களுக்கான சட்ட ரீதியான திருமணப்பதிவு வெள்ளிக்கிழமை (23) நடைபெற்றது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இராசேந்திரம் குருபரன் தலைமையில் இத்திருமணப்பதிவு நடைபெற்றது.

wedding

முல்லைத்தீவு மாவட்ட சட்ட உதவி ஆணைக்குழுவின் ஒழுங்குப்படுத்தலில் பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

திருமணப் பதிவுகளுக்கு அழைக்கப்பட்ட 19 சோடிகளில் கலந்து கொண்ட 12 சோடிகளுக்கு மட்டும் திருமணப்பதிவுகள் நடைபெற்றதாக முல்லைத்தீவு மாவட்ட சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்ட உத்தியோகஸ்தர் நி.நிர்த்தனரூபன் தெரிவித்தார்.

Related Posts