முல்லைத்தீவில் ஹர்த்தால்

வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூறும் வகையில், இன்று வியாழக்கிழமை (18) முழுவதும், முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த ஹர்த்தால் காரணமாக, பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகள் முடங்கிப்போயுள்ள போதிலும், அரச நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அனைத்தும், வழமையான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது.

Related Posts