முல்லைத்தீவில் மௌலவி ஒருவர் கைது!

முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட நீராவிப்பிட்டிப் பகுதியில் மௌலவி ஒருவரை சிறப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் மாவனெல்ல பகுதியை சேர்ந்த 48 வயதுடைய குறித்த மௌலவி நீராவிப்பிட்டி பகுதியில் தங்கி இருப்பதாக சிறப்பு பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டினை தொடர்ந்து அவரை கைதுசெய்துள்ளார்கள்.

இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து இவர் இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் செயற்பட்டார் .அந்த அமைப்பின் கூட்டங்களை நடத்தினார். என்ற சந்தேகத்தின் பேரில் இவரை கைதுசெய்துள்ளதாக முல்லைத்தீவு சிறப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்ட குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது நாளை வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Posts