முல்லைத்தீவில் மர்மநபர்களால் ஒருவர் சுட்டுக்கொலை!!

முல்லைத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மல்லாவி, பாலிநகர் பகுதியில் நேற்று இரவு வீடொன்றில் நுழைந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.

எனினும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts