முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கொலனி பகுதியில் அடையாளங்காணப்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்படவுள்ளன.
முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் குறித்த மனித எச்சங்கள் இன்று (திங்கட்கிழமை) மீட்கப்படவுள்ளன.
சுதந்திரபுரம் – கொலனி பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியில் இருந்து அகழப்பட்ட மண் நேற்று பிறிதொரு பகுதியில் கொட்டப்பட்டது. இதன்போதே, குறித்த மனித எச்சங்கள் அடையாளங்காணப்பட்டன.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அந்த பிரதேசத்திற்கு சென்ற பொலிஸார், அந்த பகுதியை அடையாளப்படுத்தியுள்ளனர்.
அத்தோடு குறித்த பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.