முல்லைத்தீவு, மல்லாவி பகுதியில் அதிகளவான சிறுவர்கள் போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படுவதாகவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனஞ்செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாகக் காணப்படுகின்ற துணுக்காய் பிரதேசத்தின் மல்லாவி சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியிலேயே கூடுதலான சிறுவர்கள் போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படுவாக கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்தவகையில், தேறாங்கண்டல், ஆலங்குளம், கோட்டைகட்டியகுளம் மற்றும் உயிலங்குளம் ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறான நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் தொடர்புகொண்டபோதும் குறித்த சுகாதார வைத்திய அதிகாரி தொடர்ந்து விடுமுறையில் உள்ளதால் இது தொடர்பான தகவல்களைப் பெறமுடியவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.